Tuesday, September 22

Tag: taman kumar

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு!

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு!

News
புதிய படத்தில் மீண்டும் இணையும் "ஒரு நொடி" படக்குழு! நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" திரைப்படம் இதுவரை வெளியானதில் சிறப்பான திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்றது. மேலும் வெற்றிகரமாக ஓடியது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் திகில் நிறைந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே. சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி. ரத்திஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோ...

பேய் பங்களா என தெரியாமலேயே இரவில் படுத்து உறங்கிய ஹீரோ தமன்குமார்!

News
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார். இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'வானத்தை போல' சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக சிட்டி முதல் பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார் ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகிறார் தமன்குமார்.. “ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்.. அந்தசமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன. அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்த...