‘தமிழ் ராக்கர்ஸ்’ பட தலைப்புக்காக மர்ம நபர்கள் மிரட்டல்!
'தமிழ் ராக்கர்ஸ்' பட தலைப்புக்காக மர்ம நபர்கள் மிரட்டல் - கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் எச்சரிக்கை!
'தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்துள்ள தயாரிப்பாளர் கே.பிச்சாண்டியை தலைப்பை மாற்றும்படி மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார.
இது குறித்து இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம் கூறியதாவது:
தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி என்பவர் கில்டில் ' தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பை பதிவு செய்தார். நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே தலைப்பை கில்டு (GUILD) சார்பாக பதிவு செய்தோம்.
தற்போது முழு திரைப்படத்தையும் முடுத்து விட்டதோடு 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பில், தயாரிப்பாளர் பிச்சாண்டி தணிக...
