Thursday, September 24

Tag: Thaen Hero tharunkumar

ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிக்கும் “தேன்” பட நாயகன் தருண்குமார்!

News
கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த அந்த சமயத்தில் தான் மிகச்சரியாக கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனாலும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டை பெற்றது மேலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் பல விருதுகளை அள்ளி வந்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருந்த படத்தின் நாயகன் தருண்குமார், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நம்பிக்கையான நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என நினைக்க வைத்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்தப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநருக்கும் மகிழ்ச்சி.. பணம் போட்டு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கும் வசூல் ரீதியாக ரொம்பவே மகிழ்ச்சி. அடுத்த படத்தையும் தருண்குமாரை...