“தலைவி” படத்தில் எம். ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி!
தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் தலைவி படத்தில் எம். ஜி. ஆராக நடிக்கவுள்ள அரவிந்த்சாமியின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தலைவர் எம். ஜி. ஆரின் பிறந்த நாளில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை அறிமுகப்படுத்துவது தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சியை தந்த அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென கருதுகிறது படக்குழு.
இயக்குநர் விஜய் கூறியதாவது...
முன்னமே சொன்னதுபோல் “தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கி பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம். இதிலுள்ள மிகப்பெரும் சவால் ...
