அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படம் ‘தளபதிஸ்டாலின் 2021’!
இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட குரலாக இந்தக் குறும்படம் 'தளபதி ஸ்டாலின் 2021'உருவாகியிருக்கிறது. இது மக்களின் குரலை எதிரொலிக்கிறது.
"ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல. காவியம்" என்று ஒரு தொண்டனின் குரலோடு தொடங்குகிறது குறும்படம். இப்போதைய ஆட்சியின் அவலங்களை வரிசையாக பட்டியலிடுவதுடன் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு பரப்பி வருபவர்களுக்கும் சாட்டையடியாக அந்தக் கதாபாத்திரத்தின் குரல் ஒலிக்கிறது.
ஸ்டாலினை ஆதரிக்க வேண்டியது தமிழக எதிர் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்துச் சொல்கிறது இப்படம். இக்குறும்படத்தை இயக்கி இருப்பவர் முத்துவீரா .
இவர் ஒரு திரைப்பட...
