திரைக்கு ரெடியான “தள்ளிப்போதே” திரைப்படம் !
இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே” அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் எனும் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் வெற்றிப்படத்துடன், அறிமுகமான இயக்குநர் R.கண்ணன் அவர்கள் அதனை தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, கண்டேன் காதலை என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் எனும் பெயர் பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் அவர் இயக்கிய ‘இவண் தந்திரன்’ எனும் ஆக்சன் கமர்ஷியல் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இதனை தொடந்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது தனது தனித்தன்மை மிகுந்த ரொமான்ஸ் வகை படத்திற்கு திரும்பியுள்ளார். முழுக்க முழுக்க காதல், நகைசைவை, உணர்வுகள் நிரம்பிய அழகான குடும்ப படத்தினை இ...
