Sunday, September 27

Tag: thangar bachan

புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’!

புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’!

News
E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. வரும் ஜூன்-5 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று பார்த்தார்.. படம் பார்த்துவிட்டு தொல். திருமாவளவன் பேசும்போது, “பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த ...
தங்கர் பச்சானுக்கு ‘செல்லுலாய்டு சிற்பி’ பட்டம் சூட்டிய ஆர்.வி.உதயகுமார்!

தங்கர் பச்சானுக்கு ‘செல்லுலாய்டு சிற்பி’ பட்டம் சூட்டிய ஆர்.வி.உதயகுமார்!

News
தங்கர் பச்சானுக்கு ‘செல்லுலாய்டு சிற்பி’ பட்டம் சூட்டிய ஆர்.வி.உதயகுமார்! இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி உதயகுமார், பிரமிட் நடராஜன், அதிதி பாலன், மஹானா சஞ்சீவ், விபின்லால், நிஜந்தன், பேபி சாரல், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், படத்தொகுப்பாளர் லெனின், கலை இயக்குனர் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ...
“கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு!

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு!

News
"கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு! அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது கருமேகங்கள் கலைகின்றன எனும் படத்தை இயக்கியுள்ளார். ரியோட்டா மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா,இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீ. லெனின் படத்தொகுப்புடன் ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. வைரமுத்து எழுதிய இந்தப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தப்படத்தின் திரை முன்னோட்டமான டிரைலரை இன்று (ஆக-13) நீதியரசர் சந்துரு அவர்களின...
“தென் இந்தியாவின் நந்திதா தாஸ் அதிதி பாலன்” – தங்கர் பச்சான்!

“தென் இந்தியாவின் நந்திதா தாஸ் அதிதி பாலன்” – தங்கர் பச்சான்!

News
"கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் அதிதி பாலன் கதாபாத்திரமான கண்மணி பாத்திரம் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான்! ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் ஒரு முதன்மைப் பாத்திரத்திற்காக நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட ‘கண்மணி’ எனும் பாத்திரத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். அருவி படத்தின் ‘அருவி’ பாத்திரத்தை எவ்வாறு மறக்க இயலாதோ, அதைவிடக் கூடுதலான தாக்கத்தை இப்பாத்திரம் இவருக்கு ஏற்படுத்தும். ஓரிடத்தில் கூட மிகையான நடிப்பு வெளிப்பட்டுவிட்டால் படத்தின் கருவிற்கு களங்கம் ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்விலேயே ‘கண்மணி’ பாத்திரத்தைப் படமாக்கினேன். என்னுடைய நம்பிக்கையை நூறு விழுக்காடு நிறைவு செய்திருக்கின்றார் அதிதி பாலன். தான் ஏற்ற பாத்திரத்திற்கு முழுமை...
“திரையரங்கிலிருந்து வீட்டுக்குள்…” –  தங்கர் பச்சான்

“திரையரங்கிலிருந்து வீட்டுக்குள்…” – தங்கர் பச்சான்

News
அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன. தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத்தவிர பிறமொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆண்டு முழுக்கக் காண வேண்டிய திரைப்படங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் பார்த்து முடிந்தது. திரைப்பட செய்திகளைக் கேள்விப்படுவதும், சுவரொட்டி விளம்பரங்களை காண்பதுமே வாழ்வின் பெருமகிழ்ச்சியாக இருந்த காலங்கள் ஒழிந்து விட்டன. முப்பது ப...
தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகிறார்!

தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகிறார்!

News
பல்வேறு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற பரபரப்பான திரைப்படங்களை இயக்கியவர், தங்கர் பச்சான். பார்த்திபன், சத்யராஜ்,சேரன், பிரபுதேவா போன்றவர்களை முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் கதைநாயகர்களாக வாழ வைத்த இவர், தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.  இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்கிறார். கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை உருவாக்கிய தங்கர் பச்சான் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்...