‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தில் அறிமுகமாகும் தங்கர் பச்சனின் மகன்!
வணக்கம்.
சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான திரைப்படம் உருவாகி இருக்கிறது. உழவுக் குடும்பத்தில் பிறந்து திரைத்துறையில் அறிமுகமாகி நாற்பது ஆண்டுகளாக இத்துறையில் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழ் சமூகம் குறித்து இலக்கியம் ,திரைப்படம் மற்றும் சமூகப் பணி மூலம் நான் ஆற்றி வரும் செயல் பாடுகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். "பேரன்பும் பெருங்கோபமும்" திரைப்படத்தில் எனது மகன் 'விஜித் பச்சான்' கதை நாயகனாக அறிமுகமாகிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்! பாலுமகேந்திரா சீடர் சிவ பிரகாஷ் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை இதுவரை கண்ட தமிழக ஆளுமைகளின் கருத்துக்களால் இப்படம் குறித்த எதிர் பார்ப்பு உருவாகியிருக்கிறது . சென்ற தீபாவளியிலிருந்து எட்டு மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் காத்திருந்து வெளியிட முயற்சி செய்து இயலாத நிலையில் தான் இத்திரைப்படம் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) தி...


