தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா!
தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா!!
2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று நடைபெற்றது .
கலைப்புலி S தாணு பேசியதாவது,
"இன்றைய சூழலில் தம்பி வெற்றிமாறனை அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ் தான். தனுஷ் தம்பி சொல்லும் போது வெற்றியோடு நாம் பண்ணுவோம் என்றார். வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் வெற்றிமாறம் என்னிடம் சார் இந்தப்படத்திற்காக வாங்கிய பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொன்னார். தேதி கு...
