Tag: Tharshan
“சனம் ஷெட்டி மீது வழக்கு தொடர மாட்டேன்” – தர்ஷன்
பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:
2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டு தான் சென்னைக்கு வந்தேன். வந்ததும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராக பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன்.
2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களை பார்த்து வாழ்த்து செய்தி அனுப்புவார். ஒருமுறை நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நாயகன் இன்னும் முடிவாகவில்லை.நீங்கள் நாயகனாக நடிக்க ஆடிஷன் வாருங்கள் என்று...



