நடனமே ஆடாமல் பிரபுதேவா நடித்திருக்கும் படம் ‘தேள்’!
STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல் ராஜா வழங்க, A ஹரிகுமார் இயக்கத்தில்
பிரபுதேவா நடிக்கும், “தேள்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, இன்று திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. STUDIO GREEN நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர்
A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவ்விழாவிலிருந்து சிறு துளிகள்
நடிகர் பிரபுதேவா கூறியதாவது…
இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படு...
