“தி கிரேட் எஸ்கேப்” (The Great Escape) ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!
தமிழில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல்!
சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! - கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் இயக்குநராக பணியாற்றிய சந்தீப் ஜே.எல், ‘அவுட்ரேஜ்’ (Outrage) படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ‘அவுட்ரேஜ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சந்தீப் ஜே.எல், இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’ தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநரும், நடிகருமான சந்தீப் ஜே.எல் கூறுகையில், “அமெரிக்க...
