Friday, October 23

Tag: therkathi veeran

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய  ‘தெற்கத்திவீரன்’!

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’!

News
ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத். சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்து...