‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் மீண்டும் களம் இறங்கும் திங்க் மியூசிக்
அசல் கோலாரின் 'ஹே சிரி' இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது!
வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று 'ஹே சிரி' பாடல். வெளியான ஒரே இரவில் இது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஹே புள்ள' பாடலின் வெற்றிக்குப் பிறகு, திங்க் மியூசிக் மற்றும் இண்டீ ஆர்ட்டிஸ்ட் கிரண் சுரத்தின் இரண்டாவது கூட்டணியில் ‘ஹே சிரி’ பாடல் உருவாகியுள்ளது.
ஆதித்யா ஆர்.கே (சூப்பர் சிங்கர் & டான் ‘பே’ பாடல் புகழ்) இந்த பாடலை பாடியிருக்க, கிரண் சுரத் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலில் நமீதா கிருஷ்ணமூர்த்தி (குலு குலு திரைப்படப் புகழ்) உடன் அசல் கோலார் திரையில் நடித்துள்ளார். அசல் கோலார் மற்றும் திங்க் மியூசிக் ஆகிய இரண்டும் இ...

