Saturday, October 3

Tag: THIRD EYE TALKIES)

சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த்!

சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த்!

News
இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் கண்ணன் சுந்தரம். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் ‘தேர்ட் ஐ டாக்கீஸ்’ (THIRD EYE TALKIES) என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் வசந்த் தலைமையில் இயக்குநர்கள் அஹமது, பிரேம்குமார், எங்கேயும் எப்போதும் சரவணன், தேவ் இயக்குனர் அர்ஜித் ரவிசங்கர், ‘அடங்காதே’ சண்முகம், க/பெ ரணசிங்கம் புகழ் விருமாண்டி, சதீஷ் செல்வகுமார், SK வெற்றிச்செல்வன், ஆர்கே மற்றும் நடிகர் பக்ஸ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டனர் இந்த நிறுவனம் துவங்கியது குறித்து நிறுவனர் கண்ணன் சுந்தரம் கூறும்போது, “திரையுலகில் இத்தனை வருட அனுபவத்தை முதலீடாக வைத்து தேர்ட் ஐ டாக்கீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள், யூடியூப் சேனல்கள், இணையதளம்...