”திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம்” – ‘கடத்தல் காரன்’ நடிகர் தாமஸ் ஆண்டனி பேட்டி!
அறிமுக இயக்குநர் எஸ்.குமார் இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கடத்தல் காரன்’.
காமெடி கலந்த கமெர்ஷியல் திரைப்படமான இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகர் தாமஸ் ஆண்டனி, தமிழ் சினிமாவில்
அறிமுகமாகியுள்ளார்.
மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், முகேஷ் என மலையாள முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கும் தாமஸ் ஆண்டனி,
‘கடத்தல் காரன்’ படத்தில் ஊர் தலைவர் கதாப்பாத்திரத்தில் தனது கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றவர், தொடர்ந்து
தமிழ் சினிமாவில் பயணிக்க முடிவு செய்திருப்பவர், தனது சினிமா பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ,
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது எப்படி?
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது பல நாள் கனவு. ஆனால்,
அதற்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது தான் ‘...
