தூக்கு துரை _ விமர்சனம்
கைலாசம் என்ற கிராமத்தில் கோயில் சிலையின் கிரீடத்தை பாதுகாத்து வரும் ஒரு ஜமீன்தார், அவரிடமிருந்து அதை 'ஆட்டை' போட முயலும் ஒரு கூட்டம் பற்றிய கதை. இன்னும் எத்தனை கலத்துக்கு இது போன்ற கதைகளையே படமாக எடுப்பார்கள் என்று தெரியவில்லை.
பட விளம்பரங்களில் யோகிபாபுவுக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தாலும், படத்தில் சில காட்சிகளே வருகிறார்.
ஜமீன்தார் மகள் இனியாவை யோகிபாபு காதலிக்கிறார். ஜமீன்தார் ஆட்கள் யோகிபாபுவை, கிணற்றில் தள்ளி கொலை செய்துவிடுகிறார்கள். அந்த கிணற்றில்தான், காணாமல் போன கிரீடம் இருக்கிறது. அதை எடுத்து, கோயிலில் வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் கிராம மக்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
யோகிபாபு காமெடியன் மட்டுமல்ல.. சிறந்த நடிகரும்கூட என்பதை மண்டேலா உள்ளிட்ட படங்கள் நிரூபித்து உள்ளன. ஆனால் அவருக்கு அச்சு பிச்சு வசனங்களை கொடுத்து எரிச்சல் ஏற்படுத்துகிறார்கள் இந்த ப...
