Friday, October 2

Tag: ThorLoveAndThunder

இந்திய ரசிகர்களிடையே வைரலாகி வரும் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’ டீசர் !

இந்திய ரசிகர்களிடையே வைரலாகி வரும் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’ டீசர் !

News
தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் இந்திய ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது ! பெரும் காத்திருப்பிற்கு பின் ஆன்லைனில் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் வெளியான சில மணிநேரங்களில் வைரலாக மாறியது! டீசரில் தோர் ஒரு சாதுவைப் போல மலையில் தியானம் செய்யும் காட்சியைப் பார்த்து, இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் படம் எவ்வாறு இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்! . மார்வல் ஸ்டுடியோஸ் திங்களன்று தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் முதல் டீசரை அறிமுகப்படுத்தியது, இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் நிகழ்வுகளுக்குப் பிறகு, உள் அமைதியைக் கண்டறிவதற்கான தோரின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சில தொடக்கக் காட்சிகளில், தோர் தனக்கு பிரியமான நட்சத்திர பெருவெளியில் தியானத்தில் இருப்பதைப் பார்க்கலாம், இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நமது சொந்த சிவபெருமானைப் போன்ற தோற்றத்துடனும் அ...