“தக்ஸ்” திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக விழா !
HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தக்ஸ்" திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு.
HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தக்ஸ்' திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, இன்று சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்கள் முன்னிலையில் அரங்கேறியது.
ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகை குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.
இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை பிரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பு பண...
