Friday, October 23

Tag: Thumbaa’ team

ஆட்டிச குழந்தைகளை ஆனந்தப்படுத்திய தும்பா குழுவினர்!

ஆட்டிச குழந்தைகளை ஆனந்தப்படுத்திய தும்பா குழுவினர்!

News
சில சந்தோஷங்கள் விவரிக்க முடியாதவை, அவற்றை வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. அப்படி ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான் தும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்திருக்கிறது. வணிகரீதியான வெற்றி மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல், பார்வையாளர்களிடமிருந்தும், குறிப்பாக குழந்தைகளிடமிருந்தும் பெரும் பாராட்டுக்களை ‘தும்பா’ பெற்றதே இதற்கு காரணம்.  இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, “தும்பாவுக்கான அருமையான வரவேற்பை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது சென்னையில் மட்டுமல்லாமல், மற்ற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை எங்களுக்கு ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை எழுதும்போதும், தயாரிக்கும் போதும், தும்பா ‘குழந்தைகளுக்கான படம்' என்பதை மனதில் வைத்தே இயங்கினோம். இருப்பினும், எங்கள் அனுமானங்களை தாண்டி, பெரியவ...