Sunday, September 20

Tag: Thumbaa

தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!

தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!

News
பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான 'பேராண்மை' மற்றும் 'வனமகன்' போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த  'தும்பா' படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்...
புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த  ‘தும்பா’!

புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘தும்பா’!

News
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிக பிரமாண்டமாக வெளியிடும், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். நாங்கள் வசனம் எழுதும்போது, எந்த கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா...
குழந்தைகளை குதூகலப்படுத்த வருகிறது தும்மா!

குழந்தைகளை குதூகலப்படுத்த வருகிறது தும்மா!

News
அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு  வந்திருந்த புலி தும்பா வேண்டுமானால் அழையா விருந்தாளியாக இருந்திருக்கலாம் (விளம்பர வீடியோவில்), ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமும், அதில் இருக்கும் குழந்தைகளும் புலி தும்பாவின் ராஜாங்கத்துக்குள் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த கோடையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் படமாக தும்பா இருக்கிறது. மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.   குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, "தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது. இருவருமே பயணக்கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும...
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும்  தீனா!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் தீனா!

News
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து புகழ் பெறும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அவர்களின் வெற்றி சின்னத்திரையில் இருந்து சாதிக்கும் கனவோடு வருபவர்களுக்கு பெரும் உத்வேகத்தை தருகிறது. அந்த வகையில் சமீபத்திய வரவு 'தீனா'. ஹரிஷ்ராம் இயக்கத்தில் 'கனா' புகழ் தர்ஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் இணைந்து 'தும்பா' படத்தில் நடித்திருக்கிறார் தீனா.   "இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. பயிற்சி பட்டறைக்கு போய் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்கள் நடிப்பு திறமையைப் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. ஒன்லைன் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்களின் தலைமுறையில் வளர்ந்தவன் நான், இந்த படத்தில் எனக்கு அப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன. என் கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு நடிக்க ஒரு பெரிய வாய்ப்ப...
தும்பா படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!

தும்பா படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!

News
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த "தும்பா" விளம்பர வீடியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு லட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை நெருங்குவதை ஒட்டி, குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றிருக்கிறார்.   ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் இது பற்றி கூறும்போது, "நாங்கள் இந்த படத்தை ஆரம்பித்தபோது, எங்கள் இயக்குனரின் திரைக்கதை மற்றும் அவரது நோக்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தோம். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும் என நம்பினோம். படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த கோட்டபாடி ஜே ராஜே...