திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) வழங்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் லீ மேஜிக் லாண்டர்ன் தியேட்டரில் இன்று இனிதே நடைபெற்றது!
சிறப்பு விருந்தினர்களாக நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் ரவி அபிராம், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் இருவரும் கலந்துகொண்டு சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்கள் .
துணை ஆணையர் ரவி அபிராம் பேசியதாவது ....
தலைக்கவசம் என்பது காலத்தின் கட்டாயம் ஹெல்மெட் என்பது ஒரு தனிமனித பழக்கவழக்கங்களில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும் . தனி மனித ஒழுக்கம் என்ற ஒன்று நடந்தாலே போதுமானது கடந்த சில ஆண்டுகளாகவே கொரானா காலகட்டம் என்பதினால் சாலைகளில் விபத்துக்கள் குறைந்து விட்டது ஹெல்மெட் அணியும் பழக்கம் பலருக்கு வந்ததினால் இறப்பு விகிதமும் குறைந்துவிட்டது .
இது பலரும் சேகரித்த ஒரு புள்ளிவிவரம் ஆகும் ஆக...
