ஒரே நாளில் 25 மில்லியன் காட்சி நிமிடங்கள் எனும் சாதனையை படைத்த தி ரோடு திரைப்படம்
த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தி ரோடு திரைப்படம் பரவலான பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. திரிஷா மிகச்சிறந்த நடிப்பையும் கடின உழைப்பையும் வழங்கி இருப்பதாக விமர்சகர்களிடையே பெயர் கிடைத்தது. இந்நிலையில் 'தி ரோடு' திரைப்படம் சமீபத்தில் 'ஆஹா' OTT தளத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் தவறவிட்ட பலரும் 'Aha' OTT தளத்தில் பார்த்து பாராட்டி சமூக வலைதளங்களில் நேர்மறையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள். 'ஆஹா' தளத்தில் வெளியான ஒரே நாளில் 25 மில்லியன் காட்சி நிமிடங்கள் எனும் சாதனையை படைத்திருக்கிறது. மேலும் புதிய பார்வையாளர்கள் பலரும் இத்திரைப்படத்தை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரிஷாவும் 'டான்சிங் ரோஸ்' சபீரும் மோதிக் கொள்ளும் வித்தியாசமான இறுதி சண்டைக்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது....








