‘தாவுத்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்!
சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படமான " தாவுத் " டைட்டில் லுக் வெளியானது!
கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஆனால் தற்போது " தாவுத் " என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.
இந்த படத்தை TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக மிக பிரமாண்டாமாக தயாரித்துள்ளனர்.
பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார்.
சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சர...
