Saturday, November 14

Tag: udanpirape review

உடன்பிறப்பே – விமர்சனம்

உடன்பிறப்பே – விமர்சனம்

Reviews
2டி என்டர்டெயிண்ட்மெண்ட் வழங்க ஜோதிகா சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் ஐம்பதாவது படமாக வெளியாகியிருகிறது உடன் பிறப்பே. படத்தின் டைட்டிலில் தயாரிப்பு சூர்யா ஜோதிகா என்று போடாமல் ஜோதிகா சூர்யா என்று போட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை எத்தனை படங்களில் பார்த்தாலும் அலுக்காது. இந்த முறை உடன் பிறப்பே படத்தில் சசிகுமாரும் ஜோதிகாவும் பாசக்கார அண்ணன் தங்கையாக வாழ்ந்து நம் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார்கள். "சாமியே தப்பு செய்தாலும் சட்டையைப் பிடிச்சு கேட்கணும்" என்று என்று ஆக்ரோஷமாக களம் இறங்கும் வேடத்தில் சசிகுமார், "சர்பத் குடிச்சாலும் சட்டப்படி குடிக்கணும்" என்று சாத்வீக வழியில் இயங்கும் சமுத்திரகனி, முன்னவரின் தங்கையாகப் பிறந்து வளர்ந்து பின்னவரின் மனைவியாக வாழும் ஜோதிகா என மூன்று பிரதான பாத்திரங்களை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் அருமையான கதையை உருவாக...