Friday, October 23

Tag: udayanidhi stalin

‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது!

‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது!

News
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது! மண் சார்ந்த யதார்த்தக் கதைகளை படைப்பதில் திறமையானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது. இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் (JIFF) இந்தப் படம் திர...

“கலகத் தலைவன்” பார்த்து வாழ்த்திய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !

News
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !!! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’....
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின்!

News
பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.  ...
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

News
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்! பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘Production No 14’ படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார். தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பு - M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை இயக்கம் - மகிழ் திருமேனி இசை - அரோல...