இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை வெளியிட்ட கே பாக்யராஜ்!
தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, 'உலகம்மை' திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார்.
'சாதி சனம்', 'காதல் எஃப்எம்' மற்றும் 'குச்சி ஐஸ்' புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான 'ஒரு கோட்டுக்கு வெளியே'-வை அடிப்படையாகக் கொண்ட 'உலகம்மை' திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. '96' புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள 'உலகம்மை' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் ஆகியோர...
