Wednesday, September 23

Tag: Uriyadi Vijay Kumar

‘உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படம்!

‘உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படம்!

News
'உறியடி', 'உறியடி 2' படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், 'சூரரை போற்று' படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார், நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஆவார். விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். பட தொகுப்பு வேலைகளை கிருபாகரனும்,சண்டைக்காட்சி மற்றும் கலை இயக்கத்தை உறியடி படத்தின் மூலம் அறிமுகமான விக்கி , ஏ...
நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார்!

நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார்!

News
நாயகனாகக் களமிறங்கும் 'உறியடி' விஜய்குமார்! இயக்குநர், நடிகர் விஜய்குமார் 'உறியடி' மற்றும் 'உறியடி 2' என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை 'உறியடி' 2 பாகங்களிலும் விஜய் குமாரின் உதவி இயக்குநராக இருந்த அபாஸ் இயக்குகிறார். ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா  இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இது. முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது....