அபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்
பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே பாதிக்கப்படும் உதயா, குறுக்கு வழியில் பெரும் கோடீஸ்வரனாக ஆகும் கதை தான் உத்தரவு மகாராஜா. அறிமுக இயக்குநர் ஆஷிஃப் குரைசி இயக்கத்தில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில், எதிர் நாயகனாக நடித்திருந்தாலும் மிகவும் வித்தியாசமான ஒப்பனைகளில் வந்து அசத்தியிருப்பார் உதயா. இவரால் பாதிக்கப்படும் பிரபு, ஒரு கட்டத்தில், மிகவும் நுண்ணிய சிப் எனப்படும் தகவல் தொடர்பு சாதனத்தை உதயாவின் காதில் பொருத்தி, பல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். எங்கிருந்து..? யாரால் ? இயக்கப்படுகிறோம் என்பது தெரியாத உதயா படும் வேதனைகள் படத்தின் சிறப்பம்சமான காட்சிகள் என்றால் அதுமிகையாகாது. இந்த நிலையில், இந்தப்படம் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த மூத்த இயக்குநர் ஆர் வி உதயகுமார், “சமீபத்தில்...
