Friday, October 23

Tag: v house production

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜீவி 2’ திரைப்படம்!

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜீவி 2’ திரைப்படம்!

News
  மாநாடு என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பு என்பதாலும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலும் ஜீவி 2 படத்துக்கு எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கின்றன! வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. ...