“அதோ அந்த பறவை போல” படத்தை விநியோகிக்கும் வி ஸ்கொயர் என்டர்டெயிண்மெண்ட் நிறுவனம்
தெளிவான பார்வையும், தீராத ஆர்வமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த குணங்களை உள்ளார்ந்த இயல்பாகக் கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக ஒரு புரட்சிக்கு வழி வகுக்கும். அந்த வகையில் திரு. விஸ்வநாதன் மற்றும் திரு. சுனில் குமார், இருவரும் அவரவர் தொழில்களில் தங்களின் சிறந்த திறமையை நிரூபித்தவர்கள். இப்போது, அவர்கள் இருவரும் V Square நிறுவனத்தின் அடுத்தகட்டமாக V Square Entertainment விநியோக நிறுவனத்தினை ஒன்றிணைந்து துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் முதல் திரைப்படமாக நடிகை அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல” படத்தினை விநியோகம் செய்யவுள்ளனர்.
V Square Entertainment சார்பில் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன் இது குறித்து கூறியதாவது…,
"சினிமா ஒரு டைம் பாஸ் அங்கமாகவும், உலகெங்கிலும் உள்ள பல பொழுதுபோக்கு ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகவும் கருதப்பட்டாலும், அது இந்தியாவில் ஒரு மதம...
