வி 3 – திரைப்பட விமர்சனம்
திரைப்படங்கள் என்பது பொழுதை போக்க மட்டுமல்ல. நல்ல கருத்துக்களைச் சொல்லி சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் சில இயக்குநர்கள் படமெடுப்பார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் வி3 படத்தை இயக்கிய அமுதவாணன்.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் மட்டும் போதுமா... அவ்வகைக் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தனது பார்வையில் சொல்லியிருக்கிறார் அமுதவாணன்.
பத்திரிகை முகவராகப் பணியாற்றும் ஆடுகளம் நரேனுக்கு இரண்டு பெண்கள்.தேர்வு எழுதச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பி வருகிறாள் மூத்த மகள்.
வழியில் அவரது இரு சக்கர வாகனம் நின்றுவிட ரிப்பேரை சரி செய்ய உதவுவதுபோல் நடிக்கும் ஐந்து காமுகர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள் அந்தப் பெண்.
முகமே தெரியாத அளவுக்கு தீயிட்டு கொழுத்தப்பட்ட அவளது பிரேதம் மட்டுமே போலீசாருக்குக் ...
