வாய்தா – விமர்சனம்
வாய்தா - விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டமும் நீதியும் எப்படி கைக்கெட்டாத தூரத்தில் இருக்கிறது என்பதையும், வலியவர்களுக்கு அது எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதையும் அழகாகவும் ஆழமாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் படம்தான் வாய்தா.
சலவைத் தொழிலாளியான முதியவர் அப்புசாமி குடிசை ஒன்றில் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொடுக்கும் பணியைச் செய்து அன்றாடப் பிழைப்பை அவஸ்த்தையுடன் நகர்த்தி வருகிறார்.
அவரது மகன் விக்னேஷ் தந்தை செய்யும் தொழிலைத் தவிர்த்து தன் தலைமுறையிலிருந்தாவது வேறு பணிக்கு மாற வேண்டும் என்ற எண்ணத்தில் விசைத்தறிக்கூடம் ஒன்றில் நெசவாளராகப் பணி செய்கிறான். வேலை பார்த்துக்கொண்டே மேல்சாதிப் பெண் ஒருத்தியையும் காதிலிக்கிறான்.
ஒரு நாள் அப்புசாமி தன் பணியைத் துவக்க இஸ்திரி பெட்டியில் நெருப்புக் கங்குகள் போடும்போது பைக்கில் வந்த ஓர் இளைஞன் அவர் மீது மோதி விடுகிறான். நெருப்...
