கௌதம் வாசுதேவ் மேனனின் யூடியூப் தளத்தில் வெளியாகும் சுயாதீனப் பாடல்!
சூரியா நாராயணன் இயக்கிய அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் தலைமை இணை இயக்குனரான இவர், இப்போது ஒரு முன்னணி OTT தளமான AHA விற்கு தலைமை தாங்குகிறார்.... நாடோடிகள், சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் கேமராமேனாகவும் ,இப்போது ஜி.வி.எம் இன் வரவிருக்கும் அம்சமான "ஜோசுவா "வை படமாக்கியும் வரும், திரு எஸ்.ஆர். கதிர்,இப்பாடலை எந்த ஒரு தொழில் உபகரணங்களும் இன்றி தனது i phone ஐ மட்டும் வைத்து படமாக்கியுள்ளார். 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் மற்றும் நடிகர்கள் , கோவலோங் சர்ஃபிங் பாயிண்டில் முழு பாடலையும் வெறும் 5 மணி நேரத்தில், குறைந்தபட்ச பட்ஜெட்டில் படமாக்கினர். பிரவீன் முத்துரங்கன், பவித்ரா மாரிமுத்து மற்றும் சாத்விகா ராஜ் ஆகியோர் நடித்துள்ள இந்த பாடலை தர்ஷனா கே.டி பாடியுள்ளார். இவர் "மதுரைக்கு போகதாடி", "கருப்பு பேரழகா" போன்ற பல ஹிட...
