வல்லவன் வகுத்ததடா _ விமர்சனம்
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
தயாரிப்பு : ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், அருள் டி. சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : விநாயக் துரை
ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் பண தேவை என்பது ஏற்படுகிறது. இவர்களிடத்தில் எதிர்பாராவிதமாக கோடிக்கணக்கிலான பணம் கிடைக்கிறது. இந்த பணம் உண்மையில் கடைசியாக யார் கையில் சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஏடிஎம் மிஷினில் காவலாளியாக பணியாற்றுபவரின் இளைய மகள் தனது காதலருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வாடகை வாகனத்திற்கு சாரதியாக பணியாற்றுகிறார்.
சில நாட்கள் கழித்து ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் தாய் வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு.. தந்தைக்குரிய கடமையை செய்ய, பை...
