வி.சி.குகநாதனின் ‘காவி ஆவி நடுவுல தேவி’!
தமிழ்த்திரையுலகில் 55 வருட திரையுலக பயணத்தில் 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கதாசிரியரும் இயக்குனருமான வி.சி.குகநாதன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு வெற்றி படங்கள் உட்பட கிட்டத்தட்ட 25 படங்கள் வரை இயக்கியவர்
தற்போது சினி கம்பைன்ஸ் சார்பில் ஆரூரான் தயாரிப்பில் உருவாகும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்கிற படத்திற்கு கதை எழுதியுள்ளார் வி.சி குகநாதன் இந்த படத்தை பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ராம்சுந்தர், பிரியங்கா இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் நகைச்சுவை யோகிபாபு, மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதுடன் 11 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திர...
