வீர தீர சூரன் பார்ட் 2 _ விமர்சனம்
வீர தீர சூரன் 2விமர்சனம்
ஒரு நல்ல திரைப்படம் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை தன்னுள் இழுத்துக்கொண்டு படத்தின் கடைசி காட்சி வரை ஒன்ற வைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் பார்த்தால் வீரதீர சூரன் பார்வையாளர்களை கட்டிப்போட்டு படம் பார்க்க வைத்திருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரியவர் என்றழைக்கப்படும் மாருதி பிரகாஷ் ராஜும், அவரது மகன் சூரஜ் வெஞ்சரமூடும் மதுரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தாதாவாக வலம் வருகின்றனர்.
அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி எஸ் ஜே சூர்யா இருவரையும் என்கவுண்டரில் போட்டு தள்ள திட்டமிடுகிறார்.
அதற்கேற்றவகையில் சந்தர்ப்பம் ஒன்றும் அமைகிறது.
இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பழைய விசுவாசி விக்ரம் உதவியை நாடுகின்றனர்.
தற்போது அடிதடி வம்புகளுக்கெல்லாம் போகாத விக்ரம் மளிகை கடை ஒன்றை நடத்திக் கொண்டு, மனைவி மக்களுடன் வசித்து வருகிறார். ...
