காமெடி சரவெடியாக உருவாகி வரும் ‘வீரப்பனின் கஜானா’!
இதுவரை நடிக்காத வேடத்தில் ‘யோகி பாபு’! -
யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’
தலைப்பு மூலமாகவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படத்தின் மற்றொரு புதிய தகவலால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்க...
