“வீட்ல விசேஷம்” திரைப்பட வெற்றி விழா !
“வீட்ல விசேஷம்” திரைப்பட வெற்றி விழா !
Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் படத்தின் நாயகன் ஆர் ஜே பாலாஜி படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வினில் RJ பாலாஜி கூறியதாவது.,
“வீட்டுல விஷேசம் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் பற்றி பலரும் பல விதமாக கூறிகொண்டிருக்கின்றனர். படத்தின் வசூல் படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன். இருந்தாலும் எங்களது முந்தைய படங்களை விட இந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்த படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. ...
