அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த “Venom: Let There Be Carnage”!
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த நிலையில், இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது, “Venom: Let There Be Carnage” திரைப்படம் !
Sony Pictures வெளியீடாக வெளிவந்திருக்கும் Venom: Let There Be Carnage திரைப்படம், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டாம் ஹார்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், வெளியான முதல் வாரத்தில், அமெரிக்க திரையரங்குகளில் $90.1 மில்லியன் வசூல் குவித்து, சாதனை படைத்துள்ளது. இது பொதுமுடக்க காலத்திற்கு பிறகு, வெளியான படங்கள் செய்த சாதனையில் மிகப்பெரிய சாதனையாகும். அக்டோபர் மாதபடங்களில் இரண்டாவது மிகப்பெரிய சாதனையென்றும் Comscore தெரிவித்துள்ளது.
இந்த செய்தி இந்திய திரையரங்குகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர் கூட்டத்தை இழுத்து வரும் என்று திரையுலகத்தினர் நம்பிக்கை தெரிவித்து...
