 
            “IGLOO” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாரத் மோகன்
            படைப்பு துறையில் புதிய திறமையாளர்களின் வருகை, உண்மையில் சினிமாவுக்கு கற்பனை வளத்தை பாய்ச்சியிருக்கிறது. இயக்குனராகும் கனவோடு வரும் இளம் திறமையாளர்கள் அனைவருக்கும் சினிமா ஒரு திறந்த துறையாக உள்ளது. இந்த துறையில் அனைவரும் மிகவும் நம்பிக்கையோடு பார்க்கிற இளைஞர்களில் ஒருவரான இயக்குனர் பாரத் மோகன், டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் "IGLOO" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
 
" 'IGLOO' நேர்மறையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜோடியை சுற்றி நடக்கும் ஒரு வலைப்பின்னல் கதை. பாதகமான சூழ்நிலையில் தான் நாம் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை வாழ்கிறோம். துருவ நிலையில் வாழும் இக்ளூஸைப் போல நாம் வாழ்கிறோம். தரமான வாழ்க்கையின் தேர்வு நேர்மறையான சிந்தனையில் உள்ளது. ஊடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த கருவி. நான் அதிகபட்சமாக அதைப் பயன்படுத்த விரும்புகிறேன். டிஜிட்டல் தளங்கள் என்னை போன்றவர...        
        
    