வெங்கட் பிரபு படத்தில் விஜய், அஜித் இணைந்து நடிப்பார்களா?
"விஜய், அஜித் சம்மதித்தால் இருவரையும் ஒரே படத்தில் இயக்க தயார்" – இயக்குநர் வெங்கட் பிரபு!
தமிழகத்தின் பிரமாண்ட ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா சென்னையில் இன்று (25.09.2022) நடைபெற்றது. அதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். அந்த விழாவில் அவர்கள் பேசியதாவது:
இயக்குநர் வெங்கட்பிரபு பேசும்போது,
இங்கிருக்கும் எல்லோரும் இந்த மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தெலுங்கு எனக்கு தெரியாது. ஆனால், தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ் நடிகர்கள் பலரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் இயக்கியதில் பல அனுபவங்கள் கிடைத்தது. சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா...
