CS அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு இனிதே நிறைவு
CS அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது !
ஒரு நடிகராக, விஜய் ஆண்டனியின் திரைப்பயணம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. அவரது படங்கள் அடுத்தடுது பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதில், வர்த்தக வட்டாரங்கள் அவரது ஒவ்வொரு புதிய படத்தின் அறிவிப்பையும் கொண்டாடுகின்றன. அவரது நடிப்பில், தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்ட, கிட்டத்தட்ட அரை டஜன் திரைப்படங்கள் 2022ல் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தின் கொல்கத்தா ஷெட்யூல், இப்போது இனிதே நிறைவடைந்துள்ளது.. வெளிநாட்டில், சில பகுதிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், படத்தின் மற்ற பகுதிகளின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்து வ...
