ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு!
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்ற விஜய் ஆன்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படம், ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆன்டனி. விடா முயற்சியுடனும் ஆழ்ந்த அர்பணிப்புடனும் களம் காணும் விஜய் ஆன்டனியின் ஒவ்வொரு படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், அவரது பிறந்த நாளானா ஜூலை 24ஆம் தேதி, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து விஜய் ஆன்டனி தெரிவ...
