Saturday, May 30

Tag: vijay sethupathy fans club

விஜய் சேதுபதிக்காக ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கும் சுயாதீனப் பாடல்!

விஜய் சேதுபதிக்காக ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கும் சுயாதீனப் பாடல்!

News
கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்த திரைக்கலைஞர்களுக்கு சுயாதீனப் பாடல்களை உருவாக்கி சமர்ப்பணம் செய்துவருகிறார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற  பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யும் எண்ணத்துடன் "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற சுயாதீனப் பாடலை தற்போது உருவாக்கியுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர். கலையை உயிருக்குச் சமமாக நேசிக்கும் மனிதர்களை வயது, சாதி, மதம், பாலினம் போன்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் திறமையின் அடிப்படையில் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, பல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களின் உறுதுணையுடன் ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கியுள்ள இந்தப் பாடலுக்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஒரு கலைஞனை இவ்வளவு நேசித்து அவருக்...
எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!

எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!

News
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில்  அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் . தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள  நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5%  /  'A " கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" " சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் .   தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது.  பயிற்சிச் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு இலட்சம்(8,00,000) ரூபாய்க்கு...