Tuesday, September 22

Tag: vijaysethpathy

விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்!

விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்தி...
‘விடுதலை பாகம்2’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

‘விடுதலை பாகம்2’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

News
  'விடுதலை பாகம்2' படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு! 'விடுதலை பாகம் 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 'விடுதலை பாகம்2' படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள அனைவருக்கும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இப்படம் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது....
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் திரைப்படம்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் திரைப்படம்!

News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்! வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்த...
புர்ஜ் கலீபாவில் ‘மகாராஜா’ முன்னோட்டம்!

புர்ஜ் கலீபாவில் ‘மகாராஜா’ முன்னோட்டம்!

News
மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் 'மகாராஜா': மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு* பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது. தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மாவீரன்', 'போர் தொழில்', ...
புர்ஜ் கலிஃபாவில் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’

புர்ஜ் கலிஃபாவில் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது! சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது. ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய...
மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!

மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு! பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய...

விஜய்சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் ‘கடைசி விவசாயி’!

News
நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். 'கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன்,...