ஸ்டார் விஜய் தொடங்கும் ‘விஜய் டக்கர்’!
ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்க உள்ளனர்!!
ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்பான டீசரைத் தொடர்ந்து, மிக அட்டகாசமான ப்ரமோ ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூகக் வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
‘விஜய் டக்கர்’ தமிழக மண்ணின் இளைஞர்களை கவரும் வகையிலான பல அட்டகாசமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். புதிய இளமை எனும் டேக் லைனுடன் இளைஞர்களுக்கான புதிய சேனலாக இது வருகிறது.
விஜய் டக்கர் - ‘இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’
விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும். அதற்கு ‘விஜய் டக்கர் - இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.
‘விஜய் ட...
