இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் “ஹிட்லிஸ்ட்”!
தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம்.
RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் “ஹிட்லிஸ்ட்”. நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் புது வசந்தம் புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் RK C...
