தீபாவளிக்கு திரைக்கு வரும் ‘ரெய்டு’!
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது!
‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் விக்ரம் பிரபு அடுத்து வரவிருக்கும் தனது ‘ரெய்டு’ படம் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது. இது ’ரெய்டு' படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான தோற்றத்தாலும், நேர்த்தியான டீசராலும் இப்படம்...

