சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு இணைந்து வெளியிடும் விக்ராந்த் ரோணா படத்தின் டீசர்!
சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு இணைந்து நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் விக்ராந்த் ரோணா படத்தின் டீசரை ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 9:55 மணிக்கு வெளியிடுகிறார்கள்!
பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் 3-D அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் படத்தின் புரமோசன் வேலைகளை பிரமாண்ட வகையில் மும்முரமாக துவங்கியுள்ளார்கள்.
இந்த வார இறுதியில் 'விக்ராந்த் ரோனா' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் அற்புதமான டீசரை, வெவ்வேறு மொழி திரைத்துறைகளைச் சேர்ந்த மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட உள்ளனர். இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முறையே சிரஞ்சீவி, மோகன்லால் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளனர்.
பாட்ஷா கிச்சா சுதீப் நடி...
